நடேச மகரந்தனின் கவிதைத் தொகுப்புகள்
 

1. குளிர் வதைத்த மார்கழி
2. பனிமேல் பனி விழந்த கதை
3. பழகிய மழை
4. நீரில் படுத்திருக்கும் மீன்களின் நிழல்
5. விருட்சக் காடு

6. விண்மீன்கள் ரொம்பவே மோசமானவை
7. உதிர்பூவின் மீதேறி மிதிக்காத மிதிவண்டிப் பாதம்
8. மயில் பூத்தக் காடு
9. கரைந்து தீரும் காக்கைகள்
10. யாசகப் பறை
11. கண்கள் நெடுக வானம்.

ஒரு சூட்சுமக் கவிதையின் விதானத்தோடு தொனிக்கும் இந்த வரிகள் யாவும் கவிஞர் நடேச மகரந்தனின் கவிதைத் தொகுப்புகளுக்கான தலைப்புகள்.  இந்தத் தலைப்புகள் மட்டுமே நடேச மகரந்தன் ஒரு நல்ல இரசிகன் அல்லது தேர்ந்த கற்பனாவாதி என்பதற்கு போதுமானதாக நம்பத்தோன்றுகிறது. இத்தொகுப்புகள் எல்லாவற்றிற்குமான விமர்சனமாக இல்லாமல் வழிமொழியும் வழியாகவே கருத்துக்கள் இங்கே பதிவு செய்யப்படுகிறது.

காதல் யாசகனை, காதலின் மகாராஜாவை, காதல் கவிஞனை காதல் போக்கிரியை, யோகியை, வைத்தியக்காரனை.. என காதல் சாம்ராச்சியத்தின் அனைத்து பிரதிநிதிகளையும் காட்சிப்படுத்தும் முனைப்பை எல்லா தொகுப்புகளிலும் அல்லது அனைத்துக் கவிதைகளிலும் வெகுவாக உணரமுடிகிறது. (விருட்சக் காடு காதலிலிருந்து சற்றே விலகியிருந்தாலும் காதல் இல்லாமல் அதுவும் வளர்ந்திருக்கவில்லை.)

உருகி கரைந்து காணாமல் போவதானாலும் இறுகி கரைத்து மலையென நிறைவதானாலும் சரி காதலை உணர்த்துவதற்கான எல்லா அவதாரங்கள் எடுப்பதற்கும் கவிதை அரிதாரம் கவிஞருக்கு எளிதாய் கைவைந்திருக்கிறது. என்றாலும் கூட வெகுவான கவிதைகள் அனுபவங்களை தெரிவிப்பதாக மட்டுமே நிகழ்வதால் உச்சுக்கொட்டச் செய்யும் கழிவிறக்க மனநிலை வியாபிக்கிறது. அல்லாமல் அவற்றை உணர்ந்துவனவாக இருந்திருக்குமேயானால் வாசகன் கவிதை வசிக்க புழுக்கமில்லாமல் இருந்திருக்கும்.

‘‘இன்னொன்றும் கூட கவிஞருக்கு உணர்ந்த வேண்டுமாய் உள்ளது.’’ இவருக்கு வார்த்தைகளின் பரிச்சயம் வசதியாக இருப்பதால் தலைப்பென்றாலும் கூட ‘‘உதிர் பூவின் மிதேளி மிதிக்காத மிதிவண்டிப் பாதம்’’ என நீட்டி முழுக்கும் விபத்துகளும் ‘‘செய்யப்பட்டதெனது’’, ‘‘ரசித்தலாட்டம்’’ என கவிதைகள் என்றாலும்கூட கோர்த்து நசுக்கும் காயங்களும் சில சமயம் நிகழ்ந்திருக்கிறது. என்கிற போதும் இவைகள் திட்டமிடப்பட்டவைகள் அல்ல. ஆனால் இதுபோன்று கவிதைகள் நிகழ்வது வாசகனின் புரிதலுக்கான உழைப்பை விரைவிலேயே களைக்கச் செய்துவிடக்கூடும்.

வெறும் வார்த்தைகளின் அலங்காரமும், வசீகரமும் அல்லது சாமான்ய வாசகனின் புரிதலுக்கு சவால்விடும் தொனிகளும், நிறைவது மட்டுமே கவிதையிலக்கியம் ஆகாது என்பதை கவிஞர் உணர்ந்திருப்பதாகவே நம்புகிறபோது நடேச மகரந்தன் கவிதையுலகில் வாசம் வீசி வசிக்கும் ஏகாந்தத்தை தனக்கும் உரித்தக்கிக் கொண்டிருப்பவர் என்பதை மறுப்பதற்கில்லை. வாழ்த்துக்கள்.

அனைத்து தொகுப்புகளுக்கும்:

லலிதாமூர்த்தி பதிப்பகம்,
398 பிஈநி11, த.ப.க. வளாக குடியிருப்பு,
மருத்துவக் கல்லூரி சாலை,  தஞ்சாவூர்&10.
கைபேசி : 99438&48319.
மொத்த நூல்கள் : ரூ. 400.

(விருட்சக்காடு தொகுப்பிலிருந்து)

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o பழந்தமிழரின் இசைக்கருவிகள்
o அயல் சினிமா: ஆப்பிரிக்காவின் துண்டு வளையல்கள்
o சிறுகதை: பறை
o செம்மொழியை முறையாகக் காப்போம்
o தண்ணீர் தேசம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies