தமிழின் தொன்மை:
வேத நூல்களிலேயே திராவிடச்
சொற்கள் காண்ப்படுவதாலும் வேத காலத்துக்கு முந்தைய சிந்துவெளி பன்பாடு திராவிட மொழி
பேசிய மக்களால் உருவாக்கப்பட்டது என்பதாலும் திராவிட மொழிக் குடும்பத்தை சார்ந்த
தமிழ்மொழியே இந்தியாவின் மிகத் தொன்மையான முதல் மொழி ஆகும் என அறுதியிட்டுக்
கூறுகிறார் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.
இவ்வளவுத் தொன்மையும்
வளமும் கொண்ட வண்மொழியாக தமிழ்மொழி காலம் கடந்துதான் செம்மொழி ஆகியது. தமிழர்களின்
ஒற்றுமைக் குறைவு, மொழிப்பற்றின்மை, உட்பூசல் இவைதான் காலம் கடந்தமைக்கு காரணியம்
ஆகும். காலம் கடந்து செம்மொழி ஆனாலும் வடமொழிக்கு சமதையான இடம் தமிழுக்குத்
தரப்படவில்லை என்பது இன்னொரு அவலம் நமக்கு.
செம்மொழியாகிய வடமொழி
கல்வித்துறையில் இடம் பெற்றுள்ளது. கல்வித்துறையில் இடம்பெற்ற இம்மொழிக்கு
அயல்நாடுகளில் ஆராய்ச்சி இருக்கை பெறவும் இலக்கியங்கள் பெயர்க்கப்படவும் வாய்ப்பு
மிகுதி. பண்பாட்டு மொழிகளில் இடம் பெற்ற இம்மொழிக்கு இவ்வாய்ப்புகள் மிகக் குறைவே.
செம்மொழி ஆகிய போதே தமிழகத்திலிருந்து இலக்கியவாதிகள் பலமாகக் குறள் கொடுத்தும்
அரசியல் குறள் அமுங்கிப்போனதால் வடக்கில் உள்ளவர்களுக்குச் செவிடன் காது
சங்கொலிஆயிற்று. துறைதான் மாறவில்லை எனில் இன்னொரு அநீதியும் நடந்தது.
2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு
மேற்பட்ட இலக்கண இலக்கிய வளம் கொண்டிருக்கும் தமிழ் மொழியின் கால எல்லை 1500 ஆண்டு
என நிர்ணயித்தார்கள். இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பையும் நடுவன் அரசு கண்டுகொள்ளவெ இல்லை.
அதன் விளைவு என்ன தெரியுமா? தமிழிலிருந்து பிரிந்த கன்னடமும் கனிதெலுங்கும்
விரைவில் செம்மொழித் தகுதி பெறப் பரிசீலிக்கப்படுவதாக இப்போது நடுவண் அரசின் உள்துறை
அமைச்சர் கூறியுள்ளார்.
இப்போதுதான் புரிகிறது
தமிழின் தொன்மையைத் தாழ்த்தியதற்கு உள்நோக்கம் உண்டென்று. கன்னடர்களும்
தெலுங்கர்களும் ஒன்றுபட்டு பெறவேண்டியதைவிடக் கூடுதலாகப் பெறுகிறார்கள். நா,ஓ பொதுக்
காரியங்களில் எப்போதுமே நெல்லிக் காய்களாக இருந்து பெற வேண்டியதையும் பெறாமல் கோட்டை
விடுகிறோம். செம்மொழி ஆகிவிட்டதே நம்மொழி எல்லை மீறி பூரிப்பு அடையாமல் நம் சில
காரியங்களைச் செய்ய நம் மாநில அரசைத் தமிழ் அமைப்புகளும் படைப்பாளிகளும் தமிழ்
பற்றாளர்களும் இதழாளர்களும் நிர்பந்திக்க வேண்டும்.
இடைக் காலத்தில் வட
மொழியாளர்கள் தமிழ் மீது கொடுத்த தாக்குதலிலிருந்து தமிழ்த்தன்னைக் காதுக் கொண்டது.
இன்று ஆங்கிலம் தமிழை மெல்ல மெல்ல அழித்து வருகிறது என்று அறிஞர்கள் இன்று கவலைப்
படுகிறார்கள். மொழியை இழப்பது அறிவை இழப்பதாகும் என்கிறார் மொழியியல் பேராசிரியர்
கே.டேவிட் ஆரிசன். செம்மொழி உயர்வு பெற்ற தமிழைக் காக்கத் தவறினால் அது
அழிந்துவிடும் எனக் கவலையோடு எச்சரிக்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னால்
துணைவேந்தர் சி. சுப்ரமணியன்.
காக்கும் வழிகளில் சில:
தாய் மொழியாம் தமிழைக்
கற்காமல் பட்டம் பெறும் வாய்ப்பு இப்போது உள்ளது. அதனைத் தடை செய்யவேண்டும். புதிய
தொழில் நுட்பக் கல்வி தாய் மொழி இடத்தைப் புறக்கணிக்கிறது. இதனை மாற்றி
எப்பட்டத்திற்கு படித்தாலும் தாய் மொழியை குறிப்பிட்டக் காலம் வரை கட்டாயம்
கற்குமாறு செய்தல் வேண்டும். செருமணியில் ஒரு மாணவன் எந்த கல்வி பயின்றாலும்
வரலாரும் தாய் மொழியும் படித்தே ஆஅக வேண்டும் என்ற நிலை உள்ளது.
நீதிமன்றம், கோவில்கள்,
அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தமிழே இருத்தல் வேண்டும். எந்த பாடத்திட்டத்தில் கல்வி
கற்பிக்கப் பட்டாலும் அனைத்துக் கல்விக் கூடங்களிலும் தமிழ் மொழி முதல் மொழி ஆகல்
வேண்டும். ர்ஷ்யா போன்ற மேலை நாடுகளில் உயர் கல்வி பெறச் செய்வோர் அந்நாட்டு
மொழியிலேயே தான் கற்க வேண்டும்.
இவையெல்லாவற்றையும்
நடைமுறைப் படுத்த ஏராளமான தடைகள் வரும். தமிழ் நலன் தமிழர் நலன் கருதி இவற்றை அரசு
தொலை நோக்கோடு எதிர் கொள்ள வேண்டும். செம்மொழி நிரந்தரமாக இருக்கவும் தமிழினம்
வாழவும் இதுவொன்றே வழி. ஏனெனில் தாய் மொழியின் அறிவு அந்த சமூகத்தின் அழிவு என்பதை
மறந்துவிடுதல் கூடாது.
(தச்சன் இதழ்)